tamilnadu

img

பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை!

பொறுப்பற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை!

பெ. சண்முகம் வலியுறுத்தல் சென்னை, பிப். 9 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது சமூக வலை தளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “நிர்வாக குளறுபடிகள் காரணமாக ஞாயி றன்று நடைபெறுவதாக இருந்த டிஎன்பி எஸ்சி குரூப் 2,2ஏ தேர்வுகள் ரத்து  செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேர்வுக்கு தயாரான நிலையில் ரத்து என்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது  தமிழ்நாடு அரசு உடனடியாக கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்வு  எப்போது நடத்தப்படும் என்பதை உரிய அவ காசத்துடன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறி விக்க வேண்டும். இனிமேல் இப்படியொரு தவறு நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.