பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங் கள், மருந்துகள் ஆட்சேபணைக்குரிய விளம்பரங்கள் சட்டம் 1954இன் விதி களை மீறியதாக கேரள மாநிலம் பாலக் காடு நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரையும் நேரில் ஆஜராக பாலக்காடு மாவட்ட நீதிபதி 2 முறை உத்த ரவிட்டு இருந்தார். கடைசியாக பிப்ரவரி 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு நோட்டீஸ் அனுப்பட் டுள்ளது. ஆனால் இதுவரை இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், பதஞ்சலி நிறுவன வழக்கு சனிக்கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின் பாலக்காடு மாவட்ட நீதிபதி,”பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலை வர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் பிப்ரவரி 15ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லா விட்டால் இருவருக்கும் எதிராக ஜாமீ னில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப் பிக்கப்படும்” என அவர் உத்தரவிட்டார்.