tamilnadu

img

பட்டியலின திருமண ஊர்வலத்தில் சாதிவெறிக் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்

பட்டியலின திருமண ஊர்வலத்தில் சாதிவெறிக் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலம் மீரட் அருகே உள்ளது தாம்ராவலி கிராமம். இந்த கிரா மத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த  பகவத் சிங் என்பவருக்கு திருமணம்  நடைபெற்றது. இந்த திருமண  நிகழ்வின் போது இசைக்குழுவின ருடன் கூடிய ஊர்வலம் நடை பெற்றது.  அப்போது தாக்கூர் பிரிவு சமூ கத்தைச் சேர்ந்த சாதிவெறிக் குண்டர்கள்,”நாங்கள் வசிக்கும் தெருவுக்குள் பட்டியலின சமூகத்தி னர் திருமண ஊர்வலம் நடத்தக் கூடாது” எனக் கூறி, திருமண ஊர்வ லத்திற்குள் புகுந்து பெண்கள் உள்பட சுமார் 40 பேர் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரும்புக் கம்பி கள், கூர்மையான ஆயுதங்கள்,  மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட் டது. மேலும் திருமண ஊர்வலத்தை  வந்த வழியிலேயே திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், குதிரையில் அமர்ந்திருந்த மண மகன் பகவத் சிங்கை கீழே தள்ளி, இழுத்தும் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 6 படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

தாக்கூர் சமூகத்திற்கு ஆதரவாக காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக சாதா  ரண விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெகு தாமதத் திற்கு பின்பே வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக அதிக சப்தத்துடன் இசைக்குழுவினர் இசைத்ததால்தான் திருமண ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது என தாக்கூர் சமூகத்திற்கு ஆதர வாகவும் காவல்துறையினர் பேசி யுள்ளது கடும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

ஒப்புக்கொண்ட  பாஜக எம்.பி.,  

தாம்ராவலி வன்முறை விவகா ரம் குறித்து பாஜக எம்.பி.,யும், அக்கட்சியின் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளருமான போலா சிங்,”இந்த துரதிர்ஷ்டவச மான சம்பவத்தில் சாதிய பாகு பாட்டை வெளிப்படுத்தியவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  காவல்துறையினர் முதலில் வழக்குப்பதிவு கூட செய்ய மறுத்த னர் என பாதிக்கப்பட்ட பட்டியலி னத்தவர் என்னிடம் கூறினர். அத னால் வருங்காலத்தில் இதுமாதிரி யான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்” என உத்தரப்பிர தேச பாஜக காவல்துறையின் சாதிய பாகுபாட்டை போட்டு டைத்தார்.