tamilnadu

img

பாஜக அரசின் நாசகரக முயற்சிகளை மக்கள் சக்தியால் தான் நிறுத்தமுடியும் காப்பீட்டு ஊழியர் கருத்தரங்கில் சசிகாந்த் செந்தில் எம்பி வலியுறுத்தல்

பாஜக அரசின் நாசகரக முயற்சிகளை  மக்கள் சக்தியால் தான் நிறுத்தமுடியும்

காப்பீட்டு ஊழியர் கருத்தரங்கில் சசிகாந்த் செந்தில் எம்பி வலியுறுத்தல்

இந்தியாவை ஒரு சிலருக்கான நாடாக மாற்ற முயலும் ஆதிக்க  சக்திகளின் முயற்சியை தொழிலாளர் கள் முறியடிக்க முன்வர வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காப்பீட்டு கழக ஊழியர் சங்க கருத்தரங்கில் சசி காந்த் செந்தில் எம்பி வலியுறுத்தினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2இன் சார்பில் “விடு தலை இந்தியாவின் கனவை நனவாக்கி  வரும் பொதுத்துறைகளை பலவீனப் படுத்தும் முயற்சிகளை அனுமதி யோம்” என்ற முழக்கத்தோடு சிறப்புக்  கருத்தரங்கம் சென்னையில் சனிக் கிழமை (பிப். 22) நடைபெற்றது. தலை வர் கே.மனோகரன் தலைமை தாங்கி னார். பொதுச்செயலாளர் ஆர்.சர்வ மங்களா வரவேற்றார். இதில் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு “இந்திய அரசியலமைப்பும், பொதுத் துறைகளும்” என்ற தலைப்பில் ஆற்றிய நீண்ட உரையின் சுருக்கம் வருமாறு :   இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய நிகழ்வு. விடு தலைப் போராட்டத்தையும், பொதுத் துறை நிறுவனங்களையும் வேறு படுத்தி பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றுதான். இந்திய அரசியலமைப்பு முகவுரையில், நாமே நமக்காக உரு வாக்கிக் கொண்ட ஒரு நாடு என்று கூறு கிறது. அதுபோல் பொதுத்துறை என்பது நாமே நமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு செயல்பாட்டு தளம். அது வரை சிலரிடம் மட்டுமே இருந்த அதி கார மையத்தை எல்லோரும் சமமாக பிரித்து கொண்டதுதான் விடுதலை நாள்.  இங்கு ஆதிக்கத்திற்கும் சமத்துவத் துக்குமான சண்டை நீண்ட நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அதன் பெயர் மாறிக்கொண்டே இருக்கும்.  அன்றைக்கு ஆதிக்கத்திற்கும், சமத்துவத்துக்கும் இருந்த சண்டை தான் இன்றைக்கும் நடைபெறுகிறது. இது ஏதோ இரண்டு அரசியல் கட்சிக்கு இடையே நடக்கும் சண்டை என்று யாரும் நினைக்க வேண்டாம். ஆதிக் கத்தை விரும்புபவர்களுக்கும், சமத்து வத்தை ஏற்பவர்களுக்கும் இடையே யான சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஏன் பொதுத்துறை மீது தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள்.  எல்ஐசி-யை மூடுவ தால் யாருக்கு லாபம் என்றால் ஆதிக் கத்தை நம்புபவர்களுக்கு லாபம். நமக்காக உருவாக்கிக் கொண்ட நாட்டை, மீண்டும் ஆதிக்க சக்திகளின் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.  தற்போது மத்தியில் அப்படிப் பட்ட ஒரு ஆதிக்க சக்தி தான் இருக்கி றது. அவர்களின் வளர்ச்சியை அரசியல் கட்சிகளை தாண்டி மக்களின் குரல் தடுத்து நிறுத்தியிருக்கிறது. உதார ணமாக குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற மக்கள் சக்திகளால்தான் அவர்களை எதிர்கொள்ள முடிகிறது. மக்கள் சக்திகளை கண்டு அவர்கள்  பின் வாங்குகிறார்கள்.  பொதுத்துறை நிறுவனத்தின் மீது  இன்னும் மக்கள் நம்பிக்கை இழக்க வில்லை. காப்பீட்டுத்துறையில்  எவ்வ ளவு தான் அந்நிய முதலீட்டை அனுமதித் தாலும், மக்கள் எல்ஐசி-யை நோக்கித் தான் செல்வார்கள். அதை தடுக்க முடியவில்லை என்பதால் நிறுவ னத்தை சிதைக்கிறார்கள். அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால், நாடு விடுதலை அடைந்த பிறகு, இந்த நாடு  எல்லோருக்குமான நாடாக மாறி விட்டது. அதை மீண்டும் சிலருக்கான நாடாக மாற்றும் ஒரு முயற்சியைத் தான் அவர்கள் செய்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக மதத்தை கொண்டு வருவார்கள்,   பொதுத்துறைகளை அழிப்பது. இது பொதுத்துறைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது, நாட்டுக்கே ஒரு பிரச்சனை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்கான பிரச்சனை என பார்க்க வேண்டும்.  இந்த நாட்டில் விவசாயிகள் போராடி ஒரு மிகப் பெரிய வெற்றி பெற்று விட்டார்கள். அடுத்து தொழி லாளர்கள், உழைப்பாளிகள் போராட் டம்தான். அது இன்னும் துவங்க வில்லை. அடுத்த ஆண்டு அது துவங்கும் என நம்புகிறேன். அது துவங்கும் போது ஒரு பெரிய தீப்பொறி யாக நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆதிக்க சக்திகளின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.  பொதுத்துறைகள் எந்த விதத்தி லும் வலுவிழந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது, அதற்காக குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.  இவ்வாறு சசிகாந்த் செந்தில் பேசி னார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.கோபிநாத் வாழ்த்திப் பேசி னார். கூட்டமைப்பின் உதவி பொருளா ளர் வி.ஜானகிராமன் கருத்தரங்கை நிறைவு செய்து பேசினார். சென்னை கோட்டம் 2இன் துணைத் தலைவர் ஆர்.கிரண்குமார் நன்றி கூறினார். இதில் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.