tamilnadu

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிமையாக நிதி திரட்ட உதவும் புதிய திட்டம்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிமையாக  நிதி திரட்ட உதவும் புதிய திட்டம்

 தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் முன்னோடி முயற்சியாக ‘வேல்யூ கார்ன்’ (ValueCorn) என்னும் திட்டத்தை ஸ்டார்ட்அப் சிங்கம் அறிமுகம் செய்துள்ளது.  தொழில்முனைவோரை நிலையான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதை யும் மற்றும் அவர்களின் திறமையை வெளிப் படுத்துவதையும் வேல்யூகார்ன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. வணிகத்தில் உண்மையான வெற்றி உங்கள் மதிப்பீட்டின் அளவில் அல்ல, மாறாக மக்கள், சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கு நீங்கள் உருவாக் கும் உறுதியான மதிப்பிலிருந்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்ட்அப் சிங்கம் இணை நிறுவனர் ஹேமச் சந்திரன் கூறினார். உலக அளவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களின் மதிப்பீட்டை அதி கரிக்கச் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக விரைவாக வருமானத்தை ஈட்டுவதற்காக அவை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்கமுடியாமல் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.  அந்த வகையில், மதிப்பீட்டைக் காட்டி லும் தங்கள் தொழில்களுக்கு மதிப்பு அளிக்கும் தொழில்முனைவோர் எளிமை யாக தங்களுக்கு தேவையான நிதியை திரட்ட வும், அவர்கள் தொழிலில் வெற்றி பெறவும், அவர்களின் புரட்சிகரமான முயற்சிகளுக்கு உதவுவதை ஸ்டார்ட்அப் சிங்கம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.