பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி முழுவது மாக நிரம்பியது. இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி முதல் இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக் கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஏற்கனவே பருவமழையினால் செம்பரம் பாக்கம் ஏரியிலும் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தால் செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஞாயிறன்று காலை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.2 31 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஞாயிறன்று காலை நீர்மட்டம் 34.12 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.861 டி.எம்.சி.யாகவும உள்ளது. இதே போல் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.25 அடியாக பதிவானது. மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.யில் 3.443 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.