விபத்தில் சிக்கியது மிராஜ் - 2000 போர் விமானம்
மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்பு ரியில் விமானப்படை விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந் தது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டி ருந்த போது மிராஜ் - 2000 ரக போர் விமா னம் திடீரென ஒரு வய லில் விழுந்து நொ றுங்கி தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த நிர்வாக அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 இருக்கைகள் கொண்ட போர் விமானத்தில் இருந்த விமானிகள் காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்