tamilnadu

img

கார்ப்பரேட் நிறுவனங்களை வீழ்த்திய உழைக்கும் மக்களின் மகத்தான வெற்றி!

கார்ப்பரேட் நிறுவனங்களை வீழ்த்திய உழைக்கும் மக்களின் மகத்தான வெற்றி!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில், எத்தனால் (Ethanol) தொழிற்சாலைக்கு எதிராக 16 மாதங்க ளாகத் தொடர்ந்த மக்கள் போராட்டம் ஈட்டியுள்ள வெற்றி, இந்திய விவசாய இயக்கங்க ளின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். கார்ப்ப ரேட் மற்றும் வகுப்புவாத சக்திகளைத் தங்க ளின் ‘இரட்டை எஞ்சின்’ பலமாகக் கொண்டுள்ள பாஜக அரசாங்கத்தை, மக்களின் ஒற்றுமை எப்படி பணியவைக்கும் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும். துரோகமும் விழிப்புணர்வும் திப்பி தாலுகாவில் உள்ள ரதி கேரா கிரா மத்தில், அரிசி ஆலை அமைக்கப்போவதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றி 62.5 ஏக்கர் விளைநிலங்களை ஒரு தனியார் நிறுவனம் வாங்கியது. ஆனால், பூமிக்கடியில் ஆழ்துளைக் குழாய்கள் இறக்கப்பட்டபோதுதான், அது நிலத்தடி நீரைச் சூறையாடும் ‘எத்தனால்’ தொழிற்சாலை என்பது மக்களுக்குத் தெரிந்தது. ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க சுமார் ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதும், வெளியேறும் கழிவுகளால் நிலமும் நீரும் நஞ்சாகும் என்பதும் அறிவியல் பூர்வ மாக நிரூபிக்கப்பட்டது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் நிறுவனம் செய்த பொய்ப் பிரச்சாரங்க ளை முறியடித்து, ஆகஸ்ட் 8, 2024 அன்று மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். வீரமிகு வரலாற்றுப் பின்னணி ஹனுமன்கர் பகுதி போராட்டங்களுக்குப் புதியதல்ல. 1970-களில் ராஜஸ்தான் கால் வாய் நீர் பகிர்வுக்காக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 20,000 மக்கள் சிறை சென்றனர். 7 விவசாயிகள் தியாகிகளான அந்தப் போராட்டத்தின் விளைவாகவே, இந்த வறண்ட நிலங்கள் செழிப்பான விளைநிலங்களாக மாறின. அதேபோல் 2004 முதல் 2005ஆம் ஆண்டு வரை தோழர்கள் ஷியோபத் சிங் மற்றும் ஹேத் ராம் பெனிவால் தலைமையில் நடந்த ‘ராவ்லா - கர்சானா’ போராட்டமும் 8 விவசாயிகளின் உயிர்த்தியாகத்துடன் அரசை மண்டியிட வைத்தது. தங்களின் முன்னோர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உருவாக்கிய நிலத்தையும் நீரையும் நஞ்சாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியோடு தற்போதைய தலைமுறை களமிறங்கியது. காவல்துறை அடக்குமுறையும் மக்களின் பதிலடியும்  2025 டிசம்பர் 10 அன்று, கட்டுமானப் பணி களை நிறுத்தக் கோரிய 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் மீது காவல்துறை கொடூரமான லத்தி சார்ஜ் (தடியடி) நடத்தியது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சட்டமன்ற உறுப்பினர் துஷ்யந்த் புனியா, விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜகஜீத் ஜகி உள்ளிட்ட பல தலைவர்கள் காயமடைந்தனர். ஆனால், அடக்குமுறை போராட்டத்தைத் தணிக்கவில்லை; மாறாகத் தீயாய்ப் பரவச் செய்தது. 4,000 போலீசார் பின்வாங்க நேரிட் டது. ஆத்திரமடைந்த மக்கள் டிராக்டர்களைக் கொண்டு தொழிற்சாலையின் சுற்றுச் சுவர்களை இடித்துத் தள்ளினர். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 17 அன்று ஹனுமன்கரில் பிரம்மாண்டமான ‘மகா பஞ்சாயத்து’ நடைபெற்றது. அரசு அதிகாரி கள் பல்வேறு தடைகளை விதித்த போதிலும், தோழர்கள் பல்வான் புனியா, ராமேஸ்வர் வர்மா உள்ளிட்ட தலைவர்கள் மாவட்டமெங்கும் மேற் கொண்ட ஜாதாக்கள் (நடைபயணம்) கார ணமாக, 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழி லாளர்களின் பங்கேற்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் இருந்தது. கார்ப்பரேட் நிறுவனத்தின்  வீழ்ச்சியும் வெற்றியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு தலைவர்களுடன், ராகேஷ் திகாயத் (பாரதிய கிசான் யூனியன்), ஜோகிந்தர் உக்ர ஹான் (பாரதிய கிசான் யூனியன்) போன்ற தேசி யத் தலைவர்களும் உரையாற்றினர். ஐந்து மணிநேரம் நீடித்த இந்தப் போராட்டத்தின் அழுத்தத்தால், மாவட்ட நிர்வாகம் எழுத்துப் பூர்வமாகப் பணிய நேரிட்டது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும், பணிகள் நிறுத்தப் படும் என்றும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. மறுநாளே அத்தனியார் நிறுவனம், திப்பி தாலுகாவில் மட்டுமல்ல, ராஜஸ்தான் மாநி லத்தின் எந்தப் பகுதியிலும் எத்தனால் தொழிற் சாலை அமைக்கப் போவதில்லை என்று பகி ரங்கமாக அறிவித்தது. இது கார்ப்பரேட் - அரசு கூட்டணியின் ஆணவத்திற்கு எதிராகக் கிடைத்த முழுமையான வெற்றியாகும். விவசாயி-தொழிலாளி ஒற்றுமையின் வலி மையை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை நசுக்க வரும் எந்த ஒரு கார்ப்பரேட் சக்தியையும் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டத்தின் மூலம் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை இது 2026ஆம் ஆண் டிற்கான புதிய செய்தியாக வழங்குகிறது. 1970இல் தியாகிகளான ஏழு விவசாயிகளின் நினைவாக ஜனவரி 7ஆம் தேதி சங்காரி யாவில் நடைபெறவுள்ள மாபெரும் கூட்டம், இந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த கட்டமாக அமையப்போகிறது. இந்தர்ஜித் சிங் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி : டிச.,28)