tamilnadu

இந்திய பெரு முதலாளிகளுக்கு சாதகமாக தேசத்தின் முதுகெலும்பை உடைக்கும் சதித் திட்டம்

இந்திய பெரு முதலாளிகளுக்கு சாதகமாக தேசத்தின் முதுகெலும்பை உடைக்கும் சதித் திட்டம் ரூ. 17 லட்சம் கோடிக்கு ‘தனியார்மய’ சூதாட்டத்தில் மோடி அரசு

புதுதில்லி, ஜன. 14 - இந்தியத் திருநாட்டின் வளங்களையும், நம் முன்னோர்களும், உழைக்கும் மக்களும் தங்களின் வியர்வையாலும் வரிப்பணத்தாலும் செதுக்கிய பொதுச்சொத்துக்களையும் கார்ப்ப ரேட் முதலாளிகளின் கொள்ளை லாப வெறிக்கு தாரைவார்க்கும் ஒரு வரலாறு காணாத துரோகத்தை மோடி அரசு அரங்கேற்றத் துணிந்துள்ளது. கடந்த 2026 ஜனவரி 6 அன்று மாலை, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங் கள் துறை கமுக்கமாக ஒரு அறிவிப்பை வெளி யிட்டது. அது வெறும் அறிவிப்பு மட்டுமல்ல, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா வின் 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள் கட்டமைப்புகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் ஒரு ‘மரண சாசனம்’ ஆகும். இந்தத் திட்டம் ஏதோ தற்செயலாக வந்தது  அல்ல. 2025-26 பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாகச் சொன்ன அதே திட்டத்தை, இப்போது 852 திட்டங்களாகப் பிரித்து, ஒரு பெரும் பட்டியலாக (PPP Project Pipeline) ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள் ளது. இது விவசாயிகளின் நிலங்களையும், தொழி லாளர்களின் உழைப்பையும், பொதுமக்களின் வரிப்பணத்தையும் ஒரு சில பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு மடை மாற்றம் செய்யும் படு பயங்கரத் திட்டம் ஆகும். மக்கள் பணம்... முதலாளிகளின் லாபம்! இந்தத் திட்டத்தில் அரசு கையாண்டுள்ள வித்தை மிகவும் ஆபத்தானது. 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலைகள், மின்சார நிலையங்கள், ரயில்வே கட்டமைப்புகள் என 852 திட்டங்களை அரசு பட்டியலிட்டுள்ளது.  இதில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கு  சாலைப் போக்குவரத்துத் துறைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 8.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 108 சாலை திட்டங்கள், தனியார் வசம் செல்கின்றன. மக்கள் வயலுக்குச் செல்லவோ அல்லது விளை பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லவோ; நாம் எல்லோரும் பயணிப்பதற்கோ பயன்படும் நெடுஞ்சாலைகள் அனைத்தும் இனி தனியார் பெரும் முதலாளிகளின்கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் வைப்பது தான் சட்டம், அவர்கள் நிர்ணயிப்பதுதான் சுங்கக் கட்டணம் (Toll). இதனை ஒரு பொது - தனியார் ‘கூட்டு முயற்சி’ (PPP) என்று அரசு கூறிக் கொண்டா லும், உண்மையில் ஒரு கண்துடைப்பு. அரசு தனது கஜானாவிலிருந்து 40 சதவிகிதம் வரை பணத்தை எடுத்து, தனியாருக்குக் கொடுத்துத் தான் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுமாம். பின்னர், அந்தச் சொத்துக் களைப் பராமரிப்பது, அதன் மூலம் மக்களி டம் பணம் வசூலிப்பதும் தனியார் நிறுவனத்தி ற்குத் தான் கொடுக்கப்படுமாம். அதுமட்டு மல்ல, லாபம் வரும்போது தனியார் முத லாளி எடுத்துக்கொள்வார், நஷ்டம் ஏற் பட்டால் அந்தப் பாரத்தை அரசு ஏற்குமாம்.  மாநில உரிமைகளையும்  பறிக்கும் சதி இந்தத் தனியார்மய வேட்டை ஒன்றிய அமைச்சகங்களோடு நிற்கவில்லை. மாநில அரசுகளையும் இதில் வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசு இழுத்துள்ளது. 620 திட்டங் கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநி லங்கள் ரூ. 1.16 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுடன் இந்தச் சூதாட்டத்தில் முத லிடத்தில் நிற்கின்றன. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு என வரிசையாக ஒவ்வொரு மாநி லத்தின் முக்கியச் சொத்துக்களும் குத்தகை க்கு விடப்பட உள்ளன. மின்சாரம், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைச் சேவைகள் கூட இனி சந்தைப் பொருளாக மாற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது. சிஐடியு கடும் எச்சரிக்கை இந்தத் தேச விரோதப் போக்கைக் கண்டி த்து, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தனது கண்டனக் குரலை மிகக் கூர்மையா கப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 11 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் எளமரம் கரீம் வெளியிட்ட அறிக்கையில், இந்த 17 லட்சம் கோடி ரூபாய் திட்டமானது இந்தியாவின் எதிர்காலத்தையே கார்ப்பரேட் பிடியில் அடகு வைக்கும் செயல் என்று அவர் கடு மையாக சாடியுள்ளார். சிஐடியு தனது அறிக்கையில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுவது என்னவென் றால்: “இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொ துத்துறை நிறுவனங்களையும், பொதுச் சேவைகளையும் சீரழிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. நாட்டின் முக்கியத் துறைக ளான மின்சாரம் (ரூ. 3.04 லட்சம் கோடி),  ரயில்வே (ரூ.30,900 கோடி) மற்றும் துறை முகங்கள் ஆகியவை தனியார் வசம் செல்வது தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்த லாகும். 19,000 ரயில்களையும், 7,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களையும் கொண்ட இந்திய ரயில்வேயை, ‘வந்தே பாரத்’ என்ற போர்வையில் தனியாருக்குக் கொடுப்பது ஏழை - எளிய மக்களின் பயண உரிமை யைப் பறிப்பதாகும். ரயில்வே துறைக்குச் சொந்தமான சுமார் 4.86 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த இந்த அரசு வழிவகை செய்துள்ளது” என்று சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. திட்டமிட்ட பொருளாதாரச் சுரண்டல்: பிபிபி (PPP) எனும் மாயவலை ஒன்றிய பாஜக அரசு முன்வைக்கும் இந்த பிபிபி (PPP) முறை என்பது வெறும் முதலீடு மட்டுமல்ல; அது ஒரு திட்டமிட்ட பொருளாதாரச் சுரண்டல். பி.ஓ.டி (BOT - கட்டி, இயக்கி, பின் ஒப்படைத்தல்) மற்றும் பி.ஓ.ஓ.டி (BOOT - கட்டி, சொந்தமாக்கி, இயக்கி, பின் ஒப்படைத்தல்) போன்ற ஒப்பந்த முறைகள் மூலம் 30 முதல் 50 ஆண்டுகள் வரை நாட்டின் சொத்துக்கள் தனியார் கைகளில் முடங்கிக் கிடக்கும். உதாரணமாக, ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தில் தனியார் நிறுவனம் முதலீடு செய்கிறது என்றால், அடுத்த அரை நூற்றாண்டிற்கு அந்தச் சாலையில் நடக்கும் ஒவ்வொரு அசைவிற்கும் மக்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். விவசாய நிலங்களை ‘பாரத்மாலா’ போன்ற திட்டங்களுக்காகக் கையகப்ப டுத்தும் போது, அது நாட்டின் வளர்ச்சிக்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நிலத்தில் அமைக்கப்படும் சாலைகளைப் பராமரிக்க ‘ஹைப்ரிட் அனிவிட்டி மாடல்’ (HAM) என்ற பெயரில் அரசு தனியாருக்கு ஆண்டுதோறும் பணம் வழங்குகிறது. நிலத்தை இழந்தது விவசாயி, வரிப் பணத்தைக் கொடுத்தது பொதுமக்கள், ஆனால் லாபம் ஈட்டுவது மட்டும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்.  உழைப்பவர் உரிமைகள் நசுக்கப்படும் இந்தத் திட்டங்கள் வெறும் கட்டுமா னத்தோடு முடிந்துவிடவில்லை. இது தொழி லாளர்களின் உரிமைகளையும் சேர்த்தே பறிக்கிறது. ரயில்வேயில் மட்டும் 16 லட்சம் ஊழியர்கள் உள்ளனர், அதில் 4 லட்சம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். தனியார் மயம் தீவிரமாகும் போது, முறையான வேலைவாய்ப்பு என்பது கனவாகிப் போகும். குறைந்த கூலி, அதிக வேலை என்ற நிலை க்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள். தொழிற்சங்க உரிமைகளை முடக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தொழி லாளர் சட்டத் திருத்தங்கள் இதற்குத் துணை  போகின்றன. சிஐடியு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளபடி, மோடி அரசு கொண்டு வந்த  தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிற் சங்கங்கள் உருவாவதைத் தடுப்பதையும், முதலாளிகள் எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதையும் எளிதாக்கியுள்ளன. பணமாக்கல் என்ற பெயரில் ஒரு பகற்கொள்ளை “தேசிய பணமாக்கல் திட்டம்” (NMP) என்ற பெயரில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் லாபம் தரும் பொ துத்துறைச் சொத்துக்களைப் பணமாக்கத் துடிக்கிறது இந்த அரசு. 2025-2030 கால கட்டத்திற்குள் 10 லட்சம் கோடி ரூபாயைப் பணமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. விளையாட்டு மைதானங்கள், அரசு கிடங்கு கள், மின் கடத்திகள் என எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இது ஒரு நாட்டின் செல்வத்தை உருக்கி, சில்லறையாக மாற்றித் தனியாருக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் பகற்கொள்ளை. அரசு சொல்லும் “ஆத்மநிர்பர் பாரத்” (சுயசார்பு இந்தியா) என்பது உண்மையில் “கார்ப்பரேட் சார்பு இந்தியா”வாக மாறி விட்டது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ரூ. 20 லட்சம் கோடி மதிப்பி லான பொருளாதார ஊக்கத் திட்டத்தில் கூட, ஏழை மக்களுக்கும் விவசாயிக ளுக்கும் போய்ச் சேர்ந்தது வெறும் 10 சத விகிதத்திற்கும் குறைவான தொகையே. மீதமுள்ள பெரும் பகுதி கார்ப்பரேட் சலு கைகளாகவும், வங்கிக் கடன் தள்ளுபடி களாகவுமே கரைந்து போனது. இந்நிலையில், உழைக்கும் மக்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது என சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.