tamilnadu

img

“சிலந்தி வலையில் ஒரு பட்டாம்பூச்சி” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

இரண்டு கதைகள் ; ஒன்றை எதார்த்த பாணியிலும் மற்றதை திரைக்கதையின் உள்ளடுக்கில் சர்ரியலிச பாணியிலும் நேர்கோட்டு முறையில் அல்லாமல்  விறுவிறுப்பாக நகர்த்தி,புதிய காண்பனுவத்தை தந்துள்ளது தென்கொரியப் படமான,”சிலந்தி வலை”.

மான,”சிலந்தி வலை”. 70களின் காலகட்டம்; திரைக் கதை யைப் படமாக்கும் முன்பே, அரசுக்கு எதிராக ஏதேனும் கருத்து உள்ளதா என்  பதை  கலை,பண்பாட்டு அமைச்சகம் சரிபார்த்த பின்பே படமெடுக்க அனு மதி அளிக்கப்படும்.படப்பிடிப்பும் அனு மதிக்கு பின்னரே தொடங்க வேண்டும்.திரைக்கதையை மீறி படமாக்குவது அப்படம் தடை செய்யப்படுவதோடு அது  தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். தென்கொரிய சினிமா இயக்குனர் கிம்; இவரது ஆசான் சின். படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில் தீ விபத்தில் சிக்கி இறந்து போகிறார். அப்போது,அவரிடம் உதவி இயக்குந ராக பணியாற்றிய கிம்,”காதல் ஒரு தீச் சுடர்” என்ற சின்னின் திரைக்கதையைத் திருடிச்சென்று விடுகிறார். திரையுலகம் கிம்மைத் திருடனென  ஏளனம் செய்கிறது. அதனால் கிம், ஒருவித குற்ற உணர்வோடு வாழ்கிறார். தற்போது கிம்,சிலந்தி வலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆனால் அனு மதிக்கப்பட்ட திரைக்கதைப்படி படத்தின்  முடிவு ஆணாதிக்க சிந்தனையை வலுப் படுத்துவதாக இருப்பதால், முடிவை மாற்றி பெண் விடுதலையை பேசுகின்ற முடிவை வைக்க விரும்புகிறார். ஆனால்,இந்த மாற்றப்பட்ட திரைக்கதைக்கு அரசின் தணிக்கை அனுமதி கிடைக்க வில்லை. இதனால் திருட்டுத்தனமாக இரண்டு நாளில் மறு படப்பிடிப்பு நடத்தி,படத்தை விரைந்து முடித்திட கிம், தயாரிப்பாளர் பெய்க், மற்றும் பெய்க்கின் வளர்ப்பு மகள் மிடோ  ஆகியோர் முடிவெடுக்கின்றனர்.  ஆனால் உதவி இயக்குநர்கள் மற்றும்  நடிகர்கள் மறு படப்பிடிப்பிற்கு முதலில் மறுத்து,பின்னர் ஒத்துழைக்கின்றனர்.படப்பிடிப்பு தளத்தை பூட்டியும், டெலி போன் இணைப்பை துண்டித்தும், படப்பிடிப்பு ரகசியமாக நடக்கிறது. தகவல் கசிந்து,தணிக்கை அதிகாரி கள் படத்தளத்திற்கு வந்துவிடுகின்றனர்.எப்போது வேண்டுமானாலும் படக்குழு வினர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல்.சிலந்தி வலைக்குள் சிக்கிய பூச்சி போல்,இயக்குநர் கிம் திகைத்து நிற்கிறார்.இச்சூழலில் புதிய ஸ்கிரிப்டின்படி படமெடுத்தாரா?

இதற்கான பதிலை,கறுப்பு நகைச் சுவை வகைமையில், சிறப்பாகக் கதை சொல்லியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் கிம் ஜீ-வூண்.         தயாரிப்பாளர் கைவிட்ட நிலையில்,  இரண்டு நாளில் இப்படத்தை எப்படி  எடுப்பது என்ற மன உளைச்சலில், தேவா லய செட்டுக்குள் நுழைகிறார் இயக்கு நர் கிம்.பாவசங்கீர்த்தனை அறையில், தேவாலயத் தந்தை அமரும் இடத்தில் தனியே கவலையில் அமர்ந்து விடு கிறார். அப்போது திருத்தப்பட்ட ஸ்கிரிப்டைப் படித்த தயாரிப்பாளரின் மகள் மிடோ,கிம்மை பாராட்ட அவ ரைத் தேடிவருகிறார்.கிம்மின் காது களில் அருமையான திரைக்கதையைக் கொண்ட இப்படம் நிச்சயம் உரு வாக்கப்பட வேண்டும். இதனால் எழும் பிரச்சனைகளை சமாளிப்போமென அறிவுரை வழங்கித் தேற்றுகிறார். வழக்கப்படி,தேவாலய தந்தைதான் பாவம் புரிந்தவர்களுக்கு அறிவுரை வழங்கித் தேற்றுவது நடைமுறை. இங்கே இது மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடிகன் ஹோஷே,பியானோ வாசிக்கின்ற நடிப்பு, இயக்குநர் கிம்முக்குப் பிடிக்கவில்லை. இசைக்கலைஞன் ஒரு முறை வாசிக்க, 1000 முறை பயிற்சி எடுப்பான். பயிற்சி எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு முறை வாசிக்கும்போது, ஆயிராமாவது முறை வாசிக்கின்ற கலைஞன் போல் நடிக்க வேண்டும் என நடிகனிடம் கூறு கின்ற அறிவுரை மூலம்,நடிப்பின் இலக்க ணம் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒரு வகையான உளச்சோர்வுடன் போராடும் இயக்குநர் கிம், கற்பனையில், இறந்த இயக்குநர் சின்னோடு தனது மனக்  கவலையை பகிர்கிறார்.எல்லோரும் இவரை ஸ்கிரிப்ட் திருடன் என்றும், திறமை  இல்லாதவன் எனக் கேலி செய்வதாகக் கூறி அவரிடம் முறையிட்டு அழுகிறார்.அதற்கு சின்,”திறமை என்பது நம்மை நாமே நம்புவது.இங்கு நீ தான் டைரக்டர்.  உன்மீது முழுநம்பிக்கை கொள்.அந்த  நம்பிக்கைத் தீ கொழுந்துவிட்டு எரிய வேண்டும்.உன்னைத் திட்டுறவர்களை அந்தத் தீ எரித்து சாம்பல் ஆக்க வேண்டும்” என ஆற்றுப்படுத்தும் வசனம்  சிறப்பானது. “இறுதிக் காட்சி முடிவை மாற்றி னால்தான்,இது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு படமாக அமையும்”என இயக்குநர் கிம், தணிக்கை அதிகாரியை பொய்யாகச் சமா தானப்படுத்த அதற்கு தணிக்கை அதி காரி,“கம்யூனிஸ்ட்களை, இறுதியில்  உயிரோடு எரிக்கின்ற காட்சிவருகிற தென்றால், படப்பிடிப்பை தொடரலாம்!” எனக்கூறுவதன் மூலம் எழுபதுகளின் காலக்கட்டத்தில் தென் கொரிய ஆளும்  வர்க்கத்தின், கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலை யின் கொடூரத்தை உணரமுடிகிறது. இசை, பாடல்கள் மற்றும் ஆடை யலங்காரம் உள்ளிட்ட அனைத்தும், அக்காலக்கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் சிறப்பான பங்களிப்புச் செய்துள்ளது.

இயக்குநர் கிம்மை மையப்படுத்திய படத்தின் கதையை வண்ணத்திலும், சினிமாவுக்குள் சினிமாவாக வரும் கதையை கறுப்பு வெள்ளையிலும் காட்சிப் படுத்தி, வித்தியாசத்தை அழகியலாக உணர்த்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். வேகமான திரைக்கதை. கச்சிதமான படத்தொகுப்பு. 2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியற்ற பிரிவில் இப்படம் திரை யிடப்பட்டது. இயக்குநர் கிம் ஆக நடித்துள்ள ஷாங் ஹாங் ஹோ,சிறந்த தென் கொரியா நடிகர். இவர் 2019 இல்  வெளிவந்து உலகத்திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரை யிடப்பட்ட,”பாரஸைட்” திரைப்படத்தில் நடித்தவர்.

கதையில் வரும் இயக்குநர் கிம்  மற்றும் இதர பாத்திரங்களின் குணாதிச யங்களின் பிரதியாகவே சினிமாவுக்குள் வரும் சினிமாவின் கதாபாத்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சினிமாவில்  கிம், தயாரிப்பாளர் மற்றும் கலைஞர்கள்  இணைந்து தடைகளை உடைக்கி றார்கள்.ஆனால், சினிமாவுக்குள் ளான சினிமாவில் வரும் பாத்திரங்கள், மீறப்பட்ட மனித உறவு முறைகளுக்குள் சிக்கி, ஒருவருக்கொருவரால் அனை வரும் பழிவாங்கப்பட்டு,சிலந்தி வலைக்  குள் தலைகீழ் பிணங்களாக தொங்கு கின்றனர்.சிலந்தி வலை படிமமாக சித்த ரிக்கப்பட்டுள்ளது.   புதிய இயக்குநர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம். 2023 இல் வெளிவந்த இப்படம், பிரைம் அமேசானில் தமிழில் உள்ளது.