பீகாரில் மதிய உணவு உண்ட 70 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. அம்மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் சனியன்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்தி லேயே மாணவர்களுக்கு வாந்தி, தலைச் சுற்றல் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொட ர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ள னர் என செய்திகள் வெளியாகியுள்ளன.