கர்நாடக மாநிலம் ஏற்பாடு செய்திருந்த மாநில உயர்கல்வி அமைச் சர்கள் மாநாட்டில், பல்கலைக் கழக மானியக்குழுவின் (UGC) புதிய வரைவு விதிமுறைகளுக்கு எதிராக 6 மாநி லங்கள் கூட்டாக தீர்மானம் நிறைவேற்றி யுள்ளன. தமிழ்நாடு, கேரளம், இமாச்ச லப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கா னா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் 15 அம்ச தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதில்,“புதிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் உருவாக் கப்பட்டுள்ள யுஜிசி-யின் புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு வலி யுறுத்தப்பட்டு உள்ளது.
தீர்மானம் குறித்து, கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறுகையில்,”பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் கூட இந்த விதிமுறைகளு க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன” என்றார்.
இதனிடையே, யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார், “புதிய விதிமுறைகள் உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்தவும், வெளிப்படையான தேர்வு முறையை அறிமுகப்படுத்தவும் வழிவகுக்கும் அதனடிப்படையில் ஆக்கப்பூர்வமான கருத்துகளை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளார்.