திருச்சுழி, மே.8- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்க ளுக்கு தொடர்ந்து வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்ப ட்டுள்ளது. இந்த நிலையில்ம, 100 நாள் வேலை ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 தொழிலாளர்களுக்கு மட்டுமே வழ ங்கப்படுகிறது. இதனால், ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நி லையில், அனைத்து ஊராட்சிகளிலும் 50 சதவீத தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட 60 வயது முடிவடைந்த தொழிலாளர்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் வீரைய்யா தலைமை வகித்தார். மார்ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.அன்புச் செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் மார்க்கண்டேயன், தங்கம், எட்வர்டு தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.