குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது தனிப்படை மூலம் 47 பிடியாணைநிறைவேற்றம்
சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்கு களில் தொடர்புடைய குற்றவாளிகளின் மீது நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றும் நோக்கில், காவல்துறையால் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படை மூலம் குற்றச்சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் பிடியாணைகளை நிறைவேற்றுவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிரபல சரித்திர பதிவேடு குற்ற வாளிகளான சிவகங்கை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த காட்டுராஜாவின் மகன் ஆறுமுகம் என்ற காட்டு பூச்சி (32), படமாத்தூர் பி.வேளாங்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் ஆசைமுத்து (25), காரைக்குடி சேர்வார் ஊரணியைச் சேர்ந்த பிரான்மலை (32), திருப்பு வனம் தேரடி வீதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் பிர காஷ்ராஜ் என்ற லூசு பிரகாஷ் (27), தேவகோட்டை தாழை யூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டிமுருகன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் மூலம் இவர்கள்மீது நிலுவை யில் இருந்த நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப் பட்டன. மேலும், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 47 நீதிமன்ற பிடியாணை கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரி வித்துள்ளது. இதனிடையே, பல்வேறு குற்ற வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
இராஜபாளையம், ஜன.18- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சேத்தூர் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கண்கா ணித்த போது, போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில் அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சேத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கார்த்திகுமார், குருசாமி மகன் சந்தன குமார் மற்றும் முத்துப்பாண்டி மகன் முரளி ஆகியோர் ஆவர். 25 வயதுக்குட்பட்ட இம்மூவரும் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட முரளி என்பவர் ஏற்கனவே பல கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர் என்பது விசா ரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரி வித்துள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையில் திருவள்ளுவர் நாள் விழா கொண்டாட்டம்
சிவகங்கை, ஜன.18- சிவகங்கை தமிழவையம் மற்றும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை கிளை இணைந்து, மூன்றாம் ஆண்டாக திருவள்ளு வர் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நா. சுந்தரராஜன் விழா விற்கு தலைமை வகித்தார். தமிழ்ச் செம்மல் பகீரத நாச்சியப்பன், தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், மேனாள் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் இளங்கோவன், வழக்கறிஞர் ராம் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் பரப்பும் பணிக்காக காரைக்குடி வள்ளுவர் பேரவை நிறுவனர் மெ. ஜெயங்கொண்டான், திருக்குறளை முழுமை யாக கற்று முற்றோதல் செய்த திருப்பத்தூர் நர்மதா, தேவகோட்டை அக்சிதன், காரைக் குடி ஹாசினி, சுதர்சன், ஷர்மிதா, ஆயிஷா பர்வீன் ஆகியோருக்கு வள்ளுவர் விருது வழங்கி பாராட்டினார். நிகழ்வில் கலைமகள் முத்து கிருஷ்ணன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வனிதா, தஞ்சாவூர் திருக்குறள் பேரவை கந்தசாமி, சிவகங்கை அரிமா சங்கத் தலை வர் ரமேஷ் கண்ணன், கவிஞர் மகாபிரபு உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மேலும், சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் சேகர், மலை ராம் உணவக உரிமையாளர் பாண்டிவேல், கலை இலக்கி யப் பெருமன்ற சிவகங்கை கிளைத் தலைவர் சுந்தரமாணிக்கம், அறிவியல் இயக்க சிவ கங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கிய சாமி, தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் சிபூ, சுப்ரீம் அரிமா சங்கத் தலைவர் சி.ராஜ கோபால், அரிமா முத்துப்பாண்டியன், திருக்குறள் பரப்புநர் கல்லல் முத்தையா, புத்தகக் கடை முருகன், ட்ரெண்டிங் சிவ கங்கை ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.