மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை 5 லட்சத்து 33 ஆயிரத்து 450 ரூபாயை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ரவி வழங்கினார். இதில் 202 ஆண்டு சந்தா, 109 அரையாண்டு சந்தா, 75 தினசரி அடங்கும். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.