விமானப் படையில் காலியிடங்கள் 340
இந்திய விமானப்படையில் அதிகாரி பணியிடங்களுக்கான காலியிடங்கள்(340) நிரப்பப்பட உள்ளன. 2026 ஆம் ஆண்டிற்கான தேர்வு அறிவிக்கை. வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி : +2 – வில் கணித பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் பாடப் பிரிவில் B.E / B.Tech இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விமானப் படையால் நடத்தப்படும் AFCAT தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு திருமணமாகாத ஆண் / பெண் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு : ஜனவரி 1, 2027 அன்று குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 24 ஆகும். கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றிருந்தால் வயது வரம்பு சலுகை வழங்கப்படும். தேர்வு முறை : இந்திய விமானப் படையால் நடத்தப்படும் AFCAT தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வுக்கான அழைப்பிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : அனைவரும் ரூ.550 செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். NCC பிரிவில் சேருபவர்களுக்கு கட்டணம் இல்லை. இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.afcat.edcil.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி டிசம்பர் 14, ஆகும்.
செய்ல் (SAIL)-லில் காலியிடங்கள் 124
பொதுத்துறை நிறுவன மான செய்ல் (SAIL -Steel Authority of India Limited) நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மேனேஜ்மென்ட் டிரெய்னிங்(மேலாண்மைப் பயிற்சி) பணிகளுக்கு காலியாக உள்ள 124 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி : பொறியியல் பட்டப்படிப்பில் குறைந்தபட்சமாக 65 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் அறிவிக்கையில் உள்ளன. வயது வரம்பு : டிசம்பர் 5, 2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை : ஜனவரி 2026 அல்லது பிப்ரவரி 2026இல் ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் : இதர பிரிவினர்களுக்கு ரூ.1050 மற்றும் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள்(SC/ST/PWD) பிரிவினர்களுக்கு ரூ.300 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி டிசம்பர் 5 ஆகும்
பொதுத்துறையில் வாய்ப்பு
பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி 300 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பப் போகிறது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 01, 2025 அன்று வெளியாகும் என்று முன்னறிவிப்பை நாளிதழ்களில் வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 1 முதல் விண்ணப்பங்களை நிரப்பலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 15, 2025 ஆகும். முதல்கட்ட தேர்வு ஜனவரி 10, 2026 அன்றும், இரண்டாம் கட்டத் தேர்வு பிப்ரவரி 28, 2026 அன்றும் நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். டிசம்பர் 1, 2025 அன்று முழு அறிவிக்கையை https://www.orientalinsurance.org.in/careers என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலாளர் பணி
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் 82 இடங்களை நிரப்பப் போகிறார்கள். எம்.பி.ஏ(மேலாண்மை முதுகலை) படித்திருப்பவர்கள் இதற்குத் தகுதியானவர்களாவர். நேர்முகத் தேர்வு மூலமாக இடங்கள் நிரப்பப்படும். இது குறித்த அனைத்து விபரங்களுக்கும் www.bankofbaroda.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித்தேதி டிசம்பர் 9, 2025 ஆகும்..
