32 மீனவர்கள் சிறைப்பிடிப்பு இலங்கை கடற்படை தொடர் அராஜகம்
சென்னை, பிப். 23 - எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இராமநாதபுரம் மாவட் டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்ற 550 படகுகளுடன் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர். இவர் கள் கடலில் மீன்பிடித்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் தமிழக மீன வர்கள் 32 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்த தாகக் கூறி கைது செய்து, தலை மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய் யப்பட்ட தமிழக மீனவர் களை மீட்க நடவடிக்கை எடு க்குமாறு ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.