tamilnadu

img

300 மெகாவாட் காற்றாலை மின்சாரம்: டெண்டர் செயல்முறை தொடங்கியது

300 மெகாவாட் காற்றாலை மின்சாரம்:  டெண்டர் செயல்முறை தொடங்கியது

கேரள மின்சார வாரியம் (கே.எஸ்.இ.பி) காற்றாலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான டெண்டர் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. காற்றாலைகள் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதே இலக்கு. டெண்டர் ஒப்புதலுக்காக கேரள ஒழுங்குமுறை ஆணையரிடம் கே.எஸ்.இ.பி விரைவில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். பாலக்காடு மற்றும் இடுக்கி பகுதிகளில் பொருத்தமான வருவாய் நிலங்களை குத்தகைக்கு எடுத்து காற்றாலை நிறுவப்படும். விநாடிக்கு எட்டு மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 750 கிலோவாட் திறன் கொண்ட இயந்திரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஏழு கோடி ரூபாய் செலவாகும். இந்தத் திட்டத்திற்கான நோடல் நிறுவனமான ANERT, NIWE உடன் இணைந்து நடத்திய சாத்தியக்கூறு ஆய்வில், ராமக்கல்மேடு, அட்டப்பாடி, பாலக்காடு, பூவார், விழிஞ்ஞம் மற்றும் பொன்முடி உள்ளிட்ட 15 இடங்கள் காற்றாலை மின் அலகுகளுக்கு ஏற்றவை என்று கண்டறியப்பட்டது. பொன்முடியில் இயந்திரத்தை நிறுவ வனத்துறையின் அனுமதி தேவை. தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (NIWE) நடத்திய முதற்கட்ட ஆய்வில், 100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்ட காற்றாலை விசையால் 1,700 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 80 முதல் 120 மீட்டர் உயரத்தில் காற்றாலைகளை நிறுவுவதே கேஎஸ்இபி-யின் இலக்காகும்.

மின் கம்பங்களில் விளம்பரங்கள் அகற்ற கே.எஸ்.இ.பி அறிவிப்பு

கேரளத்தில் மின் கம்பங்களில் விளம்பரப் பலகைகளை அமைத்தவர்கள் உடனடியாக அவற்றை அகற்றுமாறு கே.எஸ்.இ.பி. கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில், விறம்பரங்களை நிறுவியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.  எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு முன் மின் கம்பங்களில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை, அவற்றை நிறுவிய நபரே அகற்ற வேண்டும். இல்லையெனில், கேஎஸ்இபி இவற்றை மாற்றும், அதற்கான செலவு விளம்பரப் பலகைகளை நிறுவியவர்களிடம் வசூலிக்கப்படும். செலவழித்த தொகையை செலுத்த அறிவிப்பு அனுப்பப்பட்ட 15 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால், கூடுதலாக 12 சதவிகித வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கே.எஸ்.இ.பி. தெரிவித்துள்ளது.