tamilnadu

img

குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள் கேட்டு 285 மனுக்கள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் உதவிகள் கேட்டு 285 மனுக்கள்

நாகர்கோவில். ஜன. 19- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   திங்களன்று நடைபெற்றது.    கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 285  மனுக்கள் பெறப்பட்டது. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை  துறைசார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தினார்.