உச்சநீதிமன்றத்தில் 241 காலியிடங்கள்
இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் பணிக்கான 241 காலியிடங்கள் நிரப்பப்பட வுள்ளன. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு, கணினி யில் பணிபுரியும் திறன் மற்றும் கணினியில் தட்டச்சு (ஆங்கிலத்தில் நிமிடத்தில் 35 வார்த்தைகள்) செய்யும் திறன். வயது : 18 முதல் 30 வரை (இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு) தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் காரண மறிதல் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் இருக்கும். விண்ணப்பிப்பதற்கு மார்ச் 8, 2025 கடைசித் தேதியாகும். கூடுதல் விப ரங்களுக்கு HYPERLINK “http://www.sci.gov.in/”www.sci.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
யுபிஎஸ்சி - ஐஇஎஸ் மற்றும் ஐஎஸ்எஸ் தேர்வுகள்
மத்திய அரசு தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்தும் ஐஇஎஸ் (Indian Economic Service) மற்றும் ஐஎஸ்எஸ் (Indian Statistical Service) தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஐஇஎஸ் - பொருளியல் பணிக்கு 12 பணியிடங்களும், ஐஎஸ்எஸ் - புள்ளிவிபரப் பணிக்கு 35 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் ஐஏஎஸ் பணிக்கு இணையானதாகக் கருதப்படுகின்றன. கல்வித்தகுதி : ஐஇஎஸ் பணிக்கு பொருளியல், வணிகப் பொருளியல் உள்ளிட்டவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியமாகும். ஐஎஸ்எஸ் பணிக்கு புள்ளியியல் பாடங்களில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 21 முதல் 30 வரை (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : மார்ச் 04, 2025 தேர்வுத் தேதி : ஜூன் 20, 2025. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வுக்கான மையம் இருக்கும்.