‘சாதி, மத பேதமின்றி சேவை செய்யும் தூய உள்ளங்கள்’
முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து
சென்னை, மே 12 - உலக செவிலியர் தினத்தை யொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனை வரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங் களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாள் வாழ்த்து கள்” என்று கூறியுள்ளார். ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளை களிலும் கையில் விளக்கை ஏந்தி தேடிச் சென்று மருத்துவச் சேவை புரிந்தவர், பிளாரன்ஸ் நைட்டிங் கேல் ஆவார். ‘கைவிளக்கேந்திய காரிகை’ எனப் போற்றப்படும் இவரே, செவிலியர் சேவையின் முன்னோடி. அவரின் பிறந்த நாள் தான் (மே 12) ‘உலக செவிலியர் தினமாக’ கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.