திண்டுக்கல், பிப். 3 - திண்டுக்கல் அருகே சாதிவெறித் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மக்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி யார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் மாங்கரை. இங்குள்ள பட்டி யலின மக்கள் மீது, திருமுருகன் மனைவி சுசிலா (50) என்பவரின் தூண்டுதல் பேரில், சாதி ஆதிக்க வெறிக்கும்பல் ஒன்று அரிவாள், கம்பு, இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சுசிலா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேரை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சாதிவெறித் தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின மக்களான முருகேஸ்வரி உள்ளிட்ட 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை யிலும், பாண்டியராஜன் என்பவர் கண்ணில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல் ராஜ், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ராணி, திண்டுக் கல் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நடந்த விவரங்களையும் கேட்டறிந்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பாப் பாத்தி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட நிர்வாகிகள் கே.டி. கலைச்செல்வன், வனஜா, பேராசிரி யை சோ. மோகனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.