tamilnadu

img

சிஏஏ விவாதத்திற்குத் தயார்; இடம், நேரத்தைச் சொல்லுங்கள்... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி

லக்னோ:
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்தம் (CAA) தொடர்பாக உள்துறைஅமைச்சர் அமித்ஷாவுடன் பொதுவிவாதம் நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக, பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இடம் மற்றும் நேரத்தை தீர்மானித்துச் சொல்லுமாறும் அமித்ஷா-வைஅவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சிஏஏ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம்; போராட்டங்களுக்குப் பயந்து, சிஏஏ-வை ஒருபோதும் திரும்பப் பெறவும் மாட்டோம்” என்று ஆணவமாக கூறிய அமித்ஷா, “சிஏஏ சட்டம் தொடர்பாக, அகிலேஷூம் மாயாவதியும் பொது விவாதத்திற்கு வரத் தயாரா?” என்றும்சவால் விடுத்தார்.இந்நிலையில், “அமித்ஷாவே விவாதத்துக்கான இடத்தை தேர்வுசெய்யட்டும்; அவருக்கு சாதகமான டிவி சேனல்கள், தொகுப்பாளர் களையும் அழைக்கட்டும்; நாங்கள்விவாதத்துக்கு தயாராக இருக்கிறோம்” என்று சமாஜ்வாதி தலைவர்அகிலேஷ் அதிரடியாக அறிவித் துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், “உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்தஇடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அமித்ஷாவின் சவாலைஏற்றுக் கொண்டுள்ளார்.