tamilnadu

img

‘ஈத்’ பண்டிகைக்கு முஸ்லிம்கள் குழந்தையை பலிகொடுக்கவாம்.... உ.பி. பாஜக எம்எல்ஏ வெறிப்பேச்சு

லக்னோ:
‘ஈத்’ பண்டிகைக்கு, முஸ்லிம்கள் விலங்குகளை பலி கொடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றுஉத்தரப்பிரதேச மாநிலம் லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ கிஷோர்குர்ஜார் மிரட்டல் விடுத்துள்ளார்.

“ஈத் பண்டிகையை முன்னிட்டு பலி கொடுக்க விரும்புபவர்கள் தங்கள் குழந்தைகளை தியாகம் செய்யட்டும். லோனி பகுதியில் இறைச்சி உண்ணுவதையோ மதுஅருந்துவதையோ நான் அனுமதிக்க மாட்டேன். அப்பாவி விலங்குகளை பலி கொடுக்கவும் அனுமதிக்க முடியாது” என்றுசெய்தியாளர்களுக்கு எம்எல்ஏகிஷோர் குர்ஜார் விலங்குநேயராக மாறி பேட்டி அளித்துள்ளார்.

“கொரோனா காலத்தையொட்டி, கோயில்களில் பிரார்த்தனைகளுக்கு, நமாஸுக்கு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதேபோல் ‘ஈத்’பண்டிகையை முன்னிட்டு விலங்குகளை பலி கொடுக்கவும் தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கும் குர்ஜார், அந்தக் காலத்தில் சனாதன தர்மத்திலும் விலங்குகள் பலி கொடுக்கப்பட்டது உண் மைதான்; ஆனால் இப்போது தேங்காய்களே நிவேதனமாக வைக்கப்படுவதாகவும் குறிப்பிட் டுள்ளார்.