போபால்:
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாஜக எம்.பி.பிரக்யா சிங் தாக்குர், சர்ச்சைகளுக்குப்பெயர் போனவர். கோட்சே-வை தேசபக்தர்என்று கூறியதாகட்டும், மனோகர் பாரிக்கர், வாஜ்பாய், அருண் ஜெட்லி,சுஷ்மா சுவராஜ் போன்றோரின் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் தீயசக்தியை ஏவிவிட்டதே காரணம் என்று உளறியதாகட்டும், மோடியே சகிக்க முடியாத அளவிற்கு பேசக்கூடியவர்.தற்போது, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேசத்தந்தை மகாத்மா காந்தியை, திடீரென ‘தேசத்தின் மகன் மகாத்மா காந்தி’ என்று கூறிசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்கூரின் பேச்சு பாஜகவினரின் பாசாங்குத் தனத்தைக் காட்டுகிறது. ஒருபுறம், அவர்கள் மகாத்மா காந்திமீது மரியாதை காட்டுவதாகக் கூறி ஊர்வலங்களை நடத்துகிறார்கள், மறுபுறம், அவர்களின் எம்.பி. அவரை அவமதிக்கிறார், என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி சாடியுள்ளார்.