லக்னோ:
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், வேலையிழந்து பசியிலும்,பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். பிழைக்கப் போனஇடத்திலிருந்து வெறும் கால் களோடு, சொந்த ஊரை நோக்கி பயணப்பட்டு, சாலைவிபத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பசு மாடுகளைப்பாதுகாக்க, எம்எல்ஏ-க்களின்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணம் ஒதுக்குவதற்கு உத்தரப்பிரதேச பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது.எம்எல்ஏ-க்கள், தங்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பசுவின் பாதுகாப்பிற்கு செலவிட விரும்பியதாகவும், ஆனால், இதற்கு சட்டத்தில் இடமில்லாத நிலையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் மே 13 அன்று வெளியிட்ட அரசாணையில் உ.பி. அரசு கூறியுள்ளது.
இதன்படி “2020-21 ஆண்டு முதல்எம்எல்ஏ-க்கள், தமது தொகுதி வளர்ச்சி நிதியில் பசுக்களுக்கு தங்குமிடம், சுற்றுச்சுவர் அமைக்கபணம் ஒதுக்கலாம். கோசாலைகளுக்கும் நிதி ஒதுக்க முடியும்”என்று உ.பி. அரசின் முதன்மை செயலாளர்களில் ஒருவரான மனோஜ் குமார்சிங் தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைசெயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏற்கெனவே பசுக்களின் பாதுகாப்பிற்காக ரூ. 600 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படுவதும், இதற்காக மக்களிடமிருந்துசிறப்பு வரிகளும் விதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.