tamilnadu

img

ஜனவரி 8-பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் கரம் கோர்க்கின்றனர்

மதுரை:
தமிழக நலன், தேச நலன் காக்கும் போராட்டத்தில்  லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் கரம் கோர்க்கின்றனர் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் கூறியுள்ளார்.அரசு ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்த ஆயத்தமாநில போராட்டக்குழுக் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி போராட்டக்குழு சார்பில் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின்மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-2020 ஜனவரி 8-ஆம் தேதிநடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில்தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 80துறை வாரி சங்கங்கள் பங்கேற்கும். அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், மத்திய-மாநில அரசுகள் புதிய வேலை வாய்ப்புகளைஉருவாக்க வேண்டும். மத்திய, மாநில மற்றும்பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி பொதுவிநியோக முறையைப் பலப்படுத்த வேண்டும்.பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் ஒப்பந்தம்,அவுட்சோர்சிங் தொழிலாளர் முறையைக் கைவிட்டு அவர்களை முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, பாதுகாப்புத்துறை ஆகியவற்றை தனியார்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மத்திய-மாநில அரசு ஊழியர்களின் வருமான வரி உச்சவரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புறநூலகர், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பன்னாட்டு தொழிலாளர் ஆணையத்தின் 15-ஆவது அமர்வு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலச்சட்டங்களை உருவாக்கி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்துகிறது என்றார்.பேட்டியின்போது அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு  மாநில அமைப்பாளர் மு.அன்பரசு, வருவாய்த்துறை அலுவலர்சங்க மாநிலத் துணைத்தலைவர் மங்களபாண்டியன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலப்பொருளாளர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, இரா.தமிழ் ஆகியோர்உடனிருந்தனர்.