districts

img

ஊரக வளர்ச்சித்துறையில் போதிய கட்டமைப்பை ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன.1- ஊரக வளர்ச்சித்துறைக்கு போதிய கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் தரும புரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணி களுக்கு போதிய ஊழியர்கள் நிய மிக்க வேண்டும். விடுமுறை நாட்க ளிலும் திட்டப்பணிகளை மேற் கொள்ள மறைமுக மிரட்டல்கள் விடுப்பதையும், நிறைவேறாத பணிகளுக்கும் அறிக்கைகள் மற் றும் புள்ளி விபரங்கள் கோருவதை கைவிட வேண்டும். உதவி இயக் குநர் நிலையிலான பதவி உயர்வு கள் உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர் மற்றும் பணி மேற் பார்வையாளர்கள், சாலை ஆய் வாளர்கள்  நிலையிலான பதவி உயர்வுகளை காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும் என வலியு றுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலு வலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆறு முகம், நல்லம்பள்ளியில் மாவட் டத் தலைவர் சதீஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், கடத்தூரில் மாவட் டச் செயலாளர் சங்கர், பாலக் கோட்டில் மாவட்டப் பொருளா ளர் சர்வோத்தமன், ஏரியூரில் மாவட்ட துணைத் தலைவர் பால முருகன், மொரப்பூரில் மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத், அரூரில் மாவட்ட இணை செயலா ளர் சீனிவாசன், பாப்பிரெட்டி பட்டியில் மாவட்ட இணை செய லாளர் பூமாரிக்கண்ணன், பென் னாகரத்தில் வட்டத் தலைவர் திம்ம ராயன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.