லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில், இஸ்லாமிய அடையாளத்திலுள்ள நகரங்களின் பெயர் களை, ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில பாஜக அரசு ஒவ்வொன்றாகமாற்றி வருகிறது. அலகாபாத்தை ‘பிரயாக்ராஜ்’ என்றும், பைசாபாத்தை அயோத்தியா என்றும், ரயில் நிலையத்திற்கு இருந்த முகல்சராய்என்ற பெயரை, ‘தீனதயாள் உபாத்தியாயா’ என்றும் ஏற் கெனவே மாற்றி விட்டது.இதன் அடுத்தகட்டமாக, ஆக்ராவின் பெயரையும் மாற்ற முடிவு செய்துள்ளது.தாஜ்மகால் அமைந் துள்ள ஆக்ரா-வின் உண்மையான பெயர் ‘ஆக்ராவன்’ என்றும், புராணத்தில் இந்தப்பெயர்தான் உள்ளது என்று கூறியுள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு, எனினும், இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆக்ரா நகரில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக வல்லுநர்களை கேட்டுக்கொண்டுள்ளது.“மகாபாரத காலத்தில்‘ஆக்ராவன்’ என்று அழைக கப்பட்ட பெயர், எப்போது, எந்த சூழ்நிலையில் ‘ஆக்ரா’வாக மாறியது?” என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.