லக்னோ
உத்தர பிரதேசத்தில் லகீம்பூர் கேரி மணடலத்தில் உள்ளது நிஹாசன் நகரம். சட்டமனற தொகுதியாக உள்ள நிஹாசனின் திரிகோலியா படுவா பேருந்து நிறுத்தம் அருகே இருந்த நிலம் தொடர்பாக அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வும், சமாஜ்வாதி கட்சியின் பிரமுகருமான நிர்வேந்திர மிஷ்ராவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிஷன் குமார் குப்தா என்பவருக்கும் பிரச்சனை இருந்துள்ளது. நீதிமன்றம் சென்றும் இதுவரை பிரச்சனைக்கு தேர்வு காண முடியவில்லை.
இந்நிலையில், கிஷன் குமார் குப்தா தனது ஆதரவாளர்கள் கும்பலாக நிலம் இருந்த பகுதிக்கு சென்றுள்ளார். பதிலுக்கு முன்னாள் எம்எல்ஏ மிஷ்ராவும் தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென இரு தரப்பினரும் ஆகோரோஷமாக மோதினர். கிஷன் குமார் குப்தா நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்றதால் நிர்வேந்திர மிஷ்ரா ஆதரவாளர்கள் தாக்குபிடிக்கமுடியாமல் திணறினர். இதனால் நிர்வேந்திர மிஷ்ரா கும்பல் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மிஷ்ராவின் மகன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உ.பி. போலீசார் போலீசார் பெயரளவில் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும், குற்றவாளி யாரென்று தெரிந்தும் இன்னும் யாரையும் கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ நிர்வேந்திர மிஷ்ரா 3 முறை நிஹாசன் தொகுதியில் எம்எல்ஏ-வாக (2 முறை சுயேட்சை, ஒருமுறை சமாஜ்வாதி) இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பாஜக வசம் உள்ளது.