tamilnadu

img

மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம்... ‘சிஏஏ’ குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து

லக்னோ:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராக, யஷ்வந்த் சின்கா ‘காந்தி அமைதி யாத்திரை’ ஒன்றைத் துவங்கியுள்ளார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மும்பையில் துவங்கிய இந்தப் பயணம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா வழியாக ஞாயிறன்று உத்தரப்பிரதேசத் தின் எட்டாவா கிராமத்தை அடைந் தது.இங்கு, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ், பகுஜன் சமாஜ் பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர், சின்கா குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து 155 அடி உயரக் கம்பத்தில் மூவர்ணதேசியக் கொடியை ஏற்றிவைத்து யஷ்வந்த் சின்கா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாம் அமைதி மற்றும் அகிம்சை செய்தியைப் பரப்பத் தயாராக இருக்கிறோம். அமைதியை விரும்பிய காந்தியின் பெயரில் நாங்கள் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு யாத்திரையை மேற் கொள்ள முடிவு செய்ததற்கு, நாட்டின் அரசியலமைப்பு, அதன் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதுதான் காரணம். மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது.பெரும் அமைதியின்மை இருப்பதாகத் தெரிகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். அனைத்து பக்கங்களிலும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த யாத்திரை மீண்டும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத்தான்.

சமீப காலமாக மக்களிடையே வெறுப்பு வளர்க்கப்படுகிறது. இதைசரி செய்ய வேண்டும். ஜனநாயகத் தில், நாம் ஒவ்வொருவருக்கும் கேள்விகேட்க உரிமை உண்டு. ஏதேனும் ஒருவிஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்தால், அரசாங்கம் மக்களின் குறைகளை செவிமடுத்துக் கேட்க வேண்டும்மத்தியில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் செயல்களால் தேசத்தின் தந்தை கொல்லப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் சமாதான செய்தியை ‘காந்தி சாந்தி யாத்திரை’ வடிவத்தில் கொண்டு வந்துள்ளோம்.இவ்வாறு யஷ்வந்த் சின்கா பேசியுள்ளார்.