tamilnadu

img

காவி உடை அணிந்தவர்களால் இந்து மதத்திற்கு ஆபத்து!

போபால்:
காவி உடை அணிந்தவர்கள், கோயில்களுக்கு உள்ளேயே பாலியல் வல்லுறவுச் செயல்களை அரங்கேற்றுவதாகவும், இதனால் சனாதன (இந்து) மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் ஆன்மீகத் துறை ஏற்பாடு செய்திருந்த ‘சந்த் சமகத்’ நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது இவ்வாறு அவர் கூறியுள்ளார். ‘முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிகப் பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது காவி அங்கி அணிந்து கொண்டு போலி மருந்து (சூரணம்) விற்கிறார்கள். காவி உடையில் இருப்பவர்களே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வில் ஈடுபடுகின்றனர். பாலியல் வன்கொடுமைகள் கோயில் களிலேயே நடைபெறுகின்றன. சனாதன தர்மத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் இவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார்’ என்று திக்விஜய் சிங் தெரிவித் துள்ளார்.

மேலும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் அரசியல் ஆர்வமுள்ளவர்களால் கடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த முழக்கம் உண்மையில் ‘ஜெய் சீதாராம்’ ஆக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ள திக்விஜய் சிங், “ராமர் என்ற பெயரில் கோஷத்தை எழுப்பும் போது, நாம் ஏன் சீதாவை மறக்கிறோம்?”என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவரும், சாமியாருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி, பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், திக்விஜய் சிங் இவ்வாறு பேசியுள்ளார்.