லக்னோ;
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் தன் பெயரைச் சேர்க்காததால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவரும் சாமியாருமான நிருத்ய கோபால் தாஸ் கூறியுள்ளார். முன்னதாக அவரை சமாதானம் செய்ய பாஜக-வினரை அவர் விரட்டியடித்துள்ளார்.
நிருத்ய தாஸை சந்திக்க, பாஜக எம்எல்ஏ வேதப்பிரகாஷ் குப்தா, மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் அயோத்தியா மகாநகர் தலைவர் அபிஷேக் மிஸ்ரா ஆகியோரை மணிதாச் கோயிலுக்கு பாஜக அனுப்பி வைத்திருந்தது.ஆனால் அவர்களை கோயிலுக்கு உள்ளேயே விடாமல் அங்கிருந்த சந்நியாசிகள் விரட்டியடித்துள்ளனர். இதனால் பாஜக சமாதானத் தூதுவர்கள் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர்.இதனிடையே, சாமியார் நிருத்ய தாஸ் கோபால் செய்தியாளர் சந்திப்புக்கும்ஏற்பாடு செய்ததால், பதற்றமடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,தொலைபேசி மூலம் நிருத்ய தாஸூடன் பேசி, ஒருவழியாக சமாதானப் படுத்தியுள்ளார். “ராமர் கோயில் அறக்கட்டளையில் இன்னும் 3 பதவிகள் காலியாகத்தான் உள்ளன, அதில் நிருத்ய கோபால் தாஸூக்கு நிச்சயம் இடமுண்டு” என்று சரிக்கட்டியுள்ளார்.
இதனிடையே ராமர் கோயில் அறக்கட்டளை விவகாரத்தில் வேறுபல சாமியார்களும் அதிருப்தி குரல் எழுப்பி யுள்ளனர்.“ராமர் கோயில் அறக்கட்டளையில் வைஷ்ணவ் சமாஜ் முற்றிலும் புறக்கணி க்கப்பட்டுள்ளது; இதனை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று சாமியார் கமல் நயன்தாஸ் கூறியுள்ளார். ராமர் கோயில் அறக்கட்டளைத் தலைவராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை நியமிக்க வேண்டும் என்று சாமியார் பரம்ஹஸ் தாஸ் சந்தவ்லியில் உண்ணா விரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.ராமர் கோயில் அறக்கட்டளையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதா தீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ், உடுப்பி பெஜாவர் மடம்,ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ், அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.