tamilnadu

img

8 புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்...

சென்னை:
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று (ஜூலை 28)  அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில்,2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிகஉற்பத்தியையும் துவக்கி வைத் தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரம்:
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடிரூபாய் முதலீட்டில், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கேப்பிடல் லேண்ட் நிறுவனத்தால் கட்டப் படும் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, ரேடியல் சாலை தகவல்தொழில் நுட்ப பூங்கா திட்டம். கடலூர் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், 300 நபர் களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா கெமிக்கல் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி திட்டம்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந் திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், 160 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்,ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான்எலெக்டரிக் நிறுவனத்தின் மின் சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந் திரா ஆரிஜின்ஸ் தொழிற் பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த யூசுய் சுசிரா நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் உள்ளிட் டவை அடிக்கல் நாட்டப்பட்ட 8  புதிய திட்டங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.