போபால்:
மத்தியப்பிரதேசத்தில் உள்ள அங்கன் வாடி மையங்களில், குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.முட்டை அசைவ உணவு என்றும், அதனை குழந்தைகளுக்கு பழக்கக் கூடாதுஎன்றும் கூறி பிரச்சனையைத் துவங்கி யுள்ள பாஜக, இவ்விவகாரத்தில் சமண சமயத்தவரையும் அரசுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது.
2016-இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப உடல்நல ஆய்வின்படி ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமுள்ள குழந்தைகளைக் கொண்ட முதல் 3 மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்றாகும். இங்கு 43 சதவிகித குழந்தைகள் குறைவான உடல் எடையுடனும், 26 சதவிகிதம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற னர். குறிப்பாக, 51.5 சதவிகித பழங்குடியினர் குழந்தைகளும், 45.9 சதவிகிதம் பட்டியல் வகுப்புக் குழந்தைகளும் எடைக்குறைவுப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, இந்த குறைபாட்டைப்போக்குவதற்கு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை வழங்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் கமல்நாத் முடிவெடுத்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் 97 ஆயிரத்து 135 அங்கன்வாடி மையங்கள் உள்ள நிலை யில், இந்த மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட 62 லட்சம் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் 7 லட்சம் பெண் களுக்கும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை வழங்கப்பட உள்ளது.ஆனால், இந்தத் திட்டத்திற்கு பாஜக-வும் அதன் ஆதரவு சங்-பரிவார அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களை அசைவ உணவுப் பழக்கத்துக்கு ஆளாக்கும் முயற்சி என்று பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளனர்.