புதுதில்லி:
மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஆர்எஸ்எஸ்-ஸின்மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி), நிர்வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா. இவர், சில நாட்களுக்குமுன்பு, தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.அதில், பத்து ரூபாய்நோட் டுகளில் மகாத்மாகாந்தியின் புகைப்படத்துக்கு பதில், அவரைப் படுகொலைசெய்த நாதுராம் கோட்சேவின் படத்தை கிராபிக்ஸ் முறையில் அச்சிட்டுள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்ததுடன், அவரைக் கைது செய்யக் கோரி, சிதிஎன்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டன.
ஆனால், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச பாஜக அரசின்காவல்துறை, இதுவரைவழக்கு பதிவுசெய்யவில்லை.“முகநூலில் வந்த பதிவை வைத்து ஒருவ மீதுவழக்கு பதிவு செய்ய முடியாது. எனினும், இதுகுறித்துவிசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளார். அவரைதேடி வருகிறோம்” என்று காவல் ஆய்வாளர் எஸ்.எம்.படேல், கூறியுள்ளார்.