காவல் கண்காணிப்பாளரிடம் இளம்பெண் புகார்
கோவை, அக்.29 - திருமணம் செய்து கொள்வ தாக கூறி ஏமாற்றியவர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன பெண் ஊழியர் கோவை மாவட்ட காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்தி பாண்டே. இவரும் கோவை வீர கேரளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் நந்த கோபால் என்பவரும் கத்தார் நாட்டில் உள்ள கத்தார் ஏர் லைன்ஸ் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் ஒன்றாக பணி புரிந்து வந்துள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி இருவரும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கத்தாரில் ஒன்றாக வசித்து வந்துள் ளனர். மேலும், கோவையில் உள்ள லட்சுமி நாராயணன் நந்த கோபால் வீட்டிற்கு வந்தும் இரு வரும் ஒன்றாக தங்கி இருந்துள் ளனர். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் லட்சுமி நாராயணன் நந்தகோபால் வேறு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும், தங்களது குடும்ப சூழலுக்கும், கலாச்சாரத்திற்கும் உன்னுடைய கலாச்சாரம் ஒத்து வராது என கூறி நித்திபாண் டேவை தவிர்த்து வந்துள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த நித்தி பாண்டே, இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மற்றும் தேசிய பெண்கள் ஆணையத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆறு மாதத் திற்கு மேலாக இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணைக்கு லட்சுமி நாராயணன் நந்தகோபால் ஆஜரா காததால் சமூக நலத்துறையினர் நித்திபாண்டேவை அழைத்து அறிவுரை கூறி புகார் மனுவை முடித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் லட்சுமி நாராயணன் நந்தகோபால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்களது குடும்பத்தினர் செய்து வருவது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த நித்தி பாண்டே செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளித் தார். இதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய லட்சுமி நாராயணன் நந்தகோபால் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தன்னை ஏமாற்றியது குறித்து லட்சுமி நாராயணன் நந்தகோபாலன் பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்களும் சேர்ந்து தன்னை மிரட்டுவ தாகவும் நித்தி பாண்டே தெரி வித்தார். இன்னும் பதினைந்து நாளில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் அந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே காவல் துறையில் புகார் அளித்து இருப்பதாகவும் நித்தி பாண்டே தெரிவித்தார். இதுகுறித்து மாதர் சங்கத் தினர் கூறுகையில், மொழி பிரச்சனை மற்றும் அதிகாரி களின் அலட்சியத்தால் கத்தார் ஏர்லைன்ஸ் ஊழியர் நித்தி பாண்டே கொடுத்த புகார் முறை யாக விசாரிக்கப்படவில்லை. 6 மாதமாக அந்த பெண்ணை கோவை காவல் துறையினர் அலைக்கழித்து உள்ளனர். இந்த பிரச்சனை குறித்து காவல் துறை முறையான விசாரணை நடத்த வேண்டும். கத்தார் நாட்டில் நடந்த தால் இதை தாங்கள் விசாரிக்க முடியாது என கூறி காவல்துறை யினர் அலைக்கழிப்பது நியாய மற்றது. பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு நியாயம் வழங்கும் வகையில் கோவை காவல்துறை யினரின் நடவடிக்கை இருக்க வேண்டும். தவறு செய்பவர் களுக்கு உறுதுணையாக கோவை காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது என தெரிவித்தனர். இந்த புகார் மனுவினை அளிக் கையில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் சுதா, வனஜா, பங்கஜவல்லி, சாமுண்டிஸ்வரி உள்ளிட்ட நிர் வாகிகள் உடனிருந்தனர்.