மத்தியப்பிரதேசத்தில் மாற்று திறனாளி மாணவி பல்கலை கழக தேர்வை காலால் எழுதி உள்ளார். இதையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வருபவர் மம்தா பட்டேல் (வயது 19). மாற்று திறனாளியான இவருக்கு கைகள் இல்லை. இதையடுத்து இவர் காலால் தனது வேலைகளை செய்யப் பழகி உள்ளார்.
இதன்பின் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கும் சென்று படித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பல்கலை கழக தேர்வையும் காலால் எழுதி முடித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, காலால் எழுதுவதற்கு எனது தந்தை எனக்கு கற்று தந்துள்ளார். நான் பள்ளி கூடத்தில் படிக்கும்பொழுது இந்த முறையில் எழுதுவதற்கு சிலர் கேலி செய்தனர். ஆனால் நான் இன்று கல்லூரி வரை சென்று படித்து உள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்து உள்ளார்