tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 30 லட்சமானது.... 

லண்டன் 
உலகை மிரட்டி வரும் கொடூர வைரஸான கொரோனா 210-க்கும் மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதில் அதிக சேதாரத்தைச் சந்தித்தது அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தான். 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயினும் (2.25 லட்சம்), 3-வது இடத்தில் இத்தாலியும் (1.97 லட்சம்)  உள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் கொரோனா பரவல் வேகம் ஓரளவு குறைந்துள்ள நிலையில்,  பிரேசில், பெரு, இந்தியா, ரஷ்யா, சவூதி போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் அமெரிக்கா (55 ஆயிரம்) முதலிடத்திலும், இத்தாலி (26 ஆயிரம்) 2-வது இடத்திலும், ஸ்பெயின் (23 ஆயிரம்) 3-வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.