tamilnadu

img

ரஷ்யாவில் ஊரடங்கு நேரத்தில் சத்தமாகப் பேசிய 5 பேர் கொலை

ரியாசான்:
ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது  வீட்டு பால்கனியில் நின்று சத்தமாக பேசிய ஐந்து பேரை ஒருவர் ஈவுஇரக்கமின்றி இளைஞர்  சுட்டுக்கொன்றார்.

ரஷ்ய தலைநர் மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் உள்ளது  ரியாசான் பிராந்தியம். இங்குள்ள யெலட்மா கிராமத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. சனிக்கிழமை மாலை யெலட்மா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பால்கனியில் நின்று ஐந்து பேர் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த 32 வயது இளைஞர் திடீரென கோபமடைந்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் மறுக்கவே துப்பாக்கியால் ஐந்துபேரையும் சுட்டுக்கொன்றார். பலியானவர்களில் நான்குபேர் ஆண்கள். ஒருவர் பெண். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர என செய்திகள் வெளியாகியுள்ளன.