ரியோ
உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா பரவல் ராக்கெட் வேகத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்கு மேல் உள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 45 ஆயிரத்து 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 17 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது. மேலும் 1,270 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை (70,524) கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா சாதாரண காய்ச்சல் என்று கூறிய அந்நாட்டு பிரதமர் போல்சோன்ரோ கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.