tamilnadu

img

கோவையில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

கோவை, ஜூலை 9- கோவையில் கொரோனா பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த மூவர் உயி ரிழந்ததால்  ஒட்டுமொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.  கோவையில் கொரோனா தொற்று  பாதிப்பவர்களின் எண்ணிக்கை சமீ பமாக அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரிக்க துவங்கி யுள்ளது.  இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டம் பள்ளப் பட்டி பகுதியைச் சேர்ந்த 80 வயது முதி யவர் உயிரிழந்தார். முன்னதாக, கொரோனா தொற்று பாதிப்பால் தனி யார் மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் புத னன்று ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் அவர் உயிரிழந்தார். 

இதேபோல் திருப்பூர் மாவட்டத் தைச் சேர்ந்த 85 வயது முதியவர் தனி யார் மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். மேலும், கோவை வரதராஜபுரம் பகு தியைச் சேர்ந்த 43 வயது  ஆண் கொரோனா தொற்று மற்றும் நுரையீரல்  பாதிப்பு காரணமாக கடந்த 8 நாட்க ளாக சிகிச்சை பெற்று வந்த நிலை யில், சிகிச்சைப் பலனின்றி உயிரி ழந்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் கோவை, திருப்பூர், கரூரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததால் இஎஸ்ஐ மருத்து வமனையில் கொரோனா உயிரிழப்புகள் 8 ஆகவும், கோவையில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆகவும் உயர்ந்துள் ளது.