ரியோ
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா டாப் கியரில் எகிறி வருகிறது. தினமும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்க கண்டங்களில் அதிக கொரோனா பலி எண்ணிக்கையை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. எனினும் ஆறுதல் செய்தியாக பிரேசிலில் 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவாவிலிருந்து மீண்டுள்ளனர்.