திருப்பூர், ஜூலை 15 – திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கினால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து சாலை யோர வியாபாரிகளுக்கும் மத்திய அரசு அறிவித்த ரூ.10ஆயிரம் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரியுள்ளது. இதுகுறித்து சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
கொரோனா தொற்று ஊரடங்கு கார ணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கடனுதவி அறிவித்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாலை யோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் குடும்பத்தை நடத்தவும் வழி யின்றி கந்து வட்டிக் கடனில் சிக்கித் தவிக் கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு அறிவித் துள்ள ரூ.10 ஆயிரம் கடனை மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற வர்கள் மட்டுமே பெற முடியும் என்றும், திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் 200 பேருக்கு மட்டுமே இக்கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்மாவட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்களும், இல்லாதவர்களுமாக 2 ஆயிரத்து 500 பேருக்கு மேல் சாலையோர வியாபாரிகள் இருக்கின்றனர். பலர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே அட்டை பெற்றவர்கள், பெறாதவர்கள் என எவ்வித பாகுபாடும் காட்டாமல் அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் மத்திய அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கடன் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.