tamilnadu

img

கோபியில் கனமழை – 10 ஆயிரம் வாழைமரங்கள் சாய்வு

கோபி, ஜூலை 21- கோபிசெட்டிபாளையத்தில் திங்களன்று இரவு பெய்த கனமழையினால் அறுவ டைக்கு தயார் நிலையிலிருந்த 10 ஆயிரத்திற் கும் அதிகமான வாழைமரங்கள் சாய்ந்தன. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்களன்று இரவு சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அலிங்கி யம், குருந்மந்தூர்மேடு, ஆண்டவர்மலை, பூதிமடைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலை யில் இருந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாழைமரங்கள் சாய்ந்தன.  இதனால் விவசா யிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். குறிப் பாக, கடந்தாண்டுகளில் இதுபோல் இயற்கை சீற்றங்களினால் சேதமடைந்த வாழை மற்றும் வேளாண்மை பயிர்களுக்கு அரசு இதுவரை  எந்தவித இழப்பீடும் வழங்காத நிலையில், தற் போது கடும் நெருக்கடியை சந்தித்துள்ள தாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.