tamilnadu

img

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த வங்கதேச நீதிமன்றம்!

வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ், நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு அந்நாட்டு நீதிமனறம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

வங்கதேச பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான 79 வயதான முகமது யூனுஸ் ஒரு பொருளாதார பேராசிரியரும் ஆவார். இவர் தலைமை தாங்கும் கிராமீன் கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்தில் எந்தவித முகாந்திரமுமின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து, வங்கதேச நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், நீதிமன்றம் முகமது யூனூஸ் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.