வங்க தேசத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவின் அருகேயுள்ள கெரனியாகஞ்ச் என்ற பகுதியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து, தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.