tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

1. பிளாஸ்டிக் ... நீங்க நல்லவரா... கெட்டவரா?!

புதிய புத்தகம் பேசுது - ஜனவரி 2௦2௦ - ஆயிஷா நடராசன் கட்டுரையிலிருந்து சில சுவையான அறிவியல் தகவல்கள்.

1.நெப்போலியனை தோற்கடித்த வெள்ளீயம்! 

1812ஆம் ஆண்டு ஆறு லட்சம் வீரர்களுடன் நெப்போலியன் ரசியா மீது படையெடுத்தான். அவனுடைய படைவீரர்கள் அணிந்திருந்த வெள்ளீயப் பித்தான்கள் 15-16 டிகிரி கடும் குளிரில் தூள் தூளாகி உதிர்ந்துவிட அவிழுந்து விழுந்த கால்சராயையும் சட்டை கோட் எல்லாவற்றையும் இறுக்கிப் பிடித்து ஆயுதங்களைப் பிடிக்க முடியாமல் ஓடி ஒளிந்து போரிலிருந்து பின்வாங்க வேண்டிவந்தது. 

2.தேனீக்கள் பேசுவது வேதியியல் மொழியிலே!

ராணித் தேனியும் வேலைக்காரத் தேனியும் தங்கள் கூடுகளில் உருவாக்கும் வேதிப்பொருளின் மூலக்கூறு ஒன்றே. ஆனால் கட்டமைப்பு மாறுபட்டது.! OH எனும் அடிப்படை கூறு இணைக்கப்பட்டிருக்கும் இடம் மட்டும் மாறியிருக்கும்.

3.பீனாலின் அவதாரங்கள் 

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிகழும் இறப்புகளுக்கு சாத்தான் காரணம் என்ற 19ஆம் நூற்றாண்டின் நம்பிக்கையை தகர்த்தவர் ஜோசப் லிஸ்டர்! அவர் கண்டுபிடித்த ஃபீனால் எனும் வேதிப்பொருள் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்டும் தொற்று நோய்களை தடுத்தது. அது மேலும் பல அவதாரங்களாக மாறியது.  கிருமி நாசினி; வண்ணமும் மெருகும் ஏற்றி! வெடிகுண்டுகள்! வெண்ணிலா ஐஸ் கிரீம்! பாடி ஸ்பிரே! புற்று நோய், எய்ட்ஸ் ஆகியவற்றிற்கு வலி நிவாரணி! மலட்டு தன்மைக்கு மருந்து! இறுதியாக பிளாஸ்டிக் எனும் வடிவம் எடுத்து யானைகளை காப்பாற்றியது. அன்றாட பயன்பாட்டுப் பொருட்களான சீப்பு, சோப்பு டப்பா, பித்தான், பேனா, செஸ் காய்கள், பியானோ பொத்தான்கள் என யாவுமே யானைத் தந்தங்களால் மட்டுமே செய்யப்பட்டதால் 1808க்கும் 1830க்கும் இடையில் அழித்தொழிக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 60லட்சம். பில்லியர்ட்ஸ் பந்துகள் யானை தந்தத்தினால் தயாரிக்கப்பட்டதால் 1850க்கும் 1900க்கும் இடையில் இந்த அழிவு மூன்று மடங்கு அதிகரித்தது. பின் பில்லியர்ட்ஸ் பந்துகளை தயாரிக்க செல்லுலோஸ் கலந்த பாலிமர் செல்லுலாய்ட் பயன்படுத்தப்பட்டது.   1907இல் பேக்லைட்டாக மாறி மின் ஊழியர்களைக் காப்பாற்றியது! மின் வடங்களில் மேல் தடவப்படும் பொருள் மற்றும் மின் ஊழியர்கள் கையுறை ஆகியவற்றில் பயன்பட்டது.

பிளாஸ்டிக் என்றழைக்கப்படும் பேக்லைட் படகுகள் முதல் நாற்காலிகள், மேசைகள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுத்தியதால் அமேசான் காடுகளும் மரங்களும் காப்பாற்றப்பட்டன. ஊனமுற்றவர்களின் செயற்கைக் கால்கள் முதல் இருதய நோயாளிகளின் ஸ்டென்ட் வரை அதன் ஆதிக்கம் தொடர்கிறது. 1933இல் பேக்லைட் பாலித்தீனாக மாறி சுற்று சூழல் அச்சுறுத்தலாக வடிவெடுத்துள்ளது. பாலித்தீன் அல்லது பிளாஸ்டிக் இரண்டு வகைப்படும். ஒன்று இளகும் தன்மை கொண்டவை இவை மறு சுழற்சி செய்ய முடிபவை. இன்னொன்று பயன்படுத்து! தூக்கி ஏறி! (use and throw) எனப்படும் மக்காத தன்மை கொண்டவை. அவைகளுக்கும் பயன்பாடுகள் உண்டு. ஆல்கலைடு ரெசின் வகை மக்காத பிளாஸ்டிக் வால்வை பயன்படுத்தியிருந்தால் கொலம்பியா விண்கலம் வெடித்திருக்காது; கல்பனா சாவ்லா காப்பற்றப்பட்டிருப்பார்.  மக்காத பிளாஸ்டிக் தடுக்கப்படவும் கட்டுப்படுத்தப்படவும் செய்ய வேண்டும் என்று கட்டுரையை முடித்திருந்தார்.

2. நடுவில கொஞ்சம்  பக்கத்தைக் காணோம் 

சிசோபெர்னியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய்க்கும் மூளையில் உள்ள நரம்பு இணைப்புகளில் ஏற்படும் இழப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக புதிய ஊடுகதிர்(ஸ்கேன்) சோதனையில் தெரியவந்துள்ளது. ‘SV2A’ எனும் நரம்பு இணைப்பில் உள்ள ஒரு புரோட்டீன் மூளையின் நரம்பு இணைப்புகளின் ஒட்டு மொத்த அடர்த்திக்கு ஒரு நல்ல குறியீடு. ஆய்வாளர்கள் அதை அளவிட்டதில் இந்த தொடர்பு காணப்பட்டது.

3. சமச்சீர் ஆபத்து  

விலங்குகளின் வண்ணங்கள் மற்றும் கோடுகள் ஆகியவை இருபக்க சமச்சீராக (bilateral symmetry) இருப்பது அவைகளின் பாதுகாப்பிற்கு தடையாக உள்ளது. இரையாகும் விலங்குகளில் காணப்படும் நடுக்கோடு அவற்றை சமச் சீராகப் பிரித்துக் காட்டுவதால் எதிரிகள் அவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்கின்றன. எனவே பரிணாம வளர்ச்சியில் இந்த விலங்குகள் தங்களுடைய வண்ணங்கள், வடிவங்கள் ஆகியவற்றின் சமச்சீரை குறைத்துக் கொண்டுள்ளன. இந்த முடிவுகள் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளன. 

4. தாவர வளர்ச்சிக்கு ஆன்  ஆப்ஃ ஸ்விட்ச்

கலிபோர்னியா ரிவர்சைடு பல்கலைக்கழகப் புதிய ஆய்வில் தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்தும் புரோட்டின் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கடுகு வகையை சேர்ந்த தாவரத்தின் வேர் செல்களில் IRK எனப்படும் இந்த புரோட்டீன் காணப்பட்டது. இதை உண்டாக்கும் ஜீன்(gene) உயிரணுவின் இயக்கத்தை நிறுத்தும்போது அந்த தாவரத்தின் வேர் செல்கள் பிரிவது  அதிகரிப்பதை ஆய்வாளர்கள் காட்டியுள்ளார்கள்.