கிருஷ்ணகிரி, ஜூன் 3- கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்ப டுத்தப்பட்டது. இதையடுத்து கிருஷ்ண கிரி மாவட்டம் ஓசூர் பகுதி யில் ஒப்பந்த தொழிலாளர்க ளாக பணியாற்றி வந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் வேலை இல்லாத்தால், சொந்த மாநிலத்திற்கே திரும்பிச் செல்லத் துவங்கி னர். ஆனால் பல தொழிலா ளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் ஊதியம் வழங்கவில்லை. இதில் பாதிக்கப்பட்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்களின் ஊதி யப் பிரச்சனையில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், கிளை நிர்வாகி விக்னேஷ் ஆகியோர் தலை யிட்டனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்து ஒப்பந்ததாரர்களை நிர்ப்பந் தித்து தொழிலாளர்கள் பாக்கி ஊதியத் தொகை 47,500 ரூபாயை அவரவர் வங்கி கணக்கில செலுத்த வைத்தனர். தொழிலாளர்களுக்காக முன் நின்று ஊதிய பாக்கி கிடைத்திட உதவிய மாவட்ட துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முரளிக்கு நன்றி தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் புத்தகம் வழங்கப் பட்டது. வாலிபர் சங்கத்தினர் எதற்கெடுத்தாலும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் என்ற தவறான கருத்தை மாற்றி அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவார ணத்தை பெற்றுத் தந்துள்ள னர் என்பதும், பொதுமுடக் கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.