tamilnadu

img

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த சிபிஎம் வேட்பாளர் வாக்குறுதி

கிருஷ்ணகிரி, டிச.22- ஓசூர் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டு (நல்லூர்) உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் போட்டி யிடுகிறார். ஓசூரில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும் என 1996 ல் மார்க்சிஸ்ட் கட்சி போரா ட்டம் நடத்தியது. இதன் விளைவாக 1997 ஆம் ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது.  தற்போது இப்பகுதியில் அரசுப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதும், பள்ளி வளாகத்தில் உள்ள புதர் செடிகள் அகற்றவும், தொடர்புச் சாலைகள், அரசு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கவும், பூங்காக்களின் ஆக்கிர மிப்புகள் அகற்றவும், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க ப்படும். மேலும், பெரிய எலசகிரி ஏரி, நல்லூர் ஏரி, கொல்லப்பள்ளி ஏரி, காசி யப்பன் ஏரி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு கள் அகற்றி, தூர்வாரி பரா மரிக்கவும், நியாயவிலை க்கடைகள் 6 ஆக  உயர்த்த வும்  நடவடிக்கை எடுக்கப்ப டும் என வேட்பாளர் அதிகப்படுத்திட சுத்தியல் அறிவால் நட்சத்திர சின்ன த்தில் வாக்களித்து வெற்றி பெற செய்திட வேண்டும் என வேட்பாளர்  கோதண்டராமன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சராத்தில் ஓசூர் வட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,  நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, ஜெய ராமன், எம்.எம் ராஜூ, கிருஷ்ண தேவராஜ், சீனிவாசன், ராஜேந்திரன் உட்படபலர் கலந்து கொண்ட னர்.